கும்பகோணம் கோவில்களுக்கு செல்ல வேண்டும்
என்று இணையத்தில் தேடிய பொழுது ஒவ்வொரு கோவிலும் கும்பகோணத்திலிருந்து எவ்வளவு தூரம்
என்ற தகவல் கிடைத்தது. ஆனால் வரிசைக்கிரமமாக எவ்வாறு செல்வது என்று தெரியவில்லை. நாங்கள்
வாடகைக்காரில் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
காலை 7 மணிக்குக் கிளம்பி முதலில் ஸ்வாமி மலை
– திருவலஞ்சுழி – பட்டீஸ்வரம் – திருக்கருகாவூர் – 108 சிவாலயம் என்று அழைக்கப்படும்
ராமலிங்க ஸ்வாமி கோவில் – சுந்தரப்பெருமாள் கோவில் அருகில் உள்ள குரு சுராஜானந்தா ப்ருந்தாவனம்
தரிசனத்துக்குப் பின் மதியம் ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 58 கி.மி.
மாலை 4 மணி அளவில் கிளம்பி திருவிசைநல்லூரில்
உள்ள ரிஷப ராசி பரிஹாரக் கோவில், கற்கடேஸ்வரர் கோவில், ஸ்ரீதர அய்யாவாள் மடம், திருபுவனம்,
திருவிடைமருதூர் மற்றும் கோவிந்தா புரத்திலுள்ள விட்டல் ருக்மிணி கோவில், காஞ்சி மஹாபெரியவாள்
தபோவனம், பகவந்நாம போதேந்த்ராள் அதிஷ்டானம் தரிசனம் செய்து 9 மணிக்கு ஹோட்டல் வந்தோம்.
பயணம் செய்த தூரம் 35 கி.மி.
இறைஅருளால்
தாங்களும் தரிசனம் செய்ய வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment