ஸ்வாமிமலை:
மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னதி கீழே இருக்கிறது. முருகனை தரிசிக்க 60 படிகள் ஏறவேண்டும்.
60 தமிழ் வருடங்களைக் குறிக்கும். சுலபமாக ஏற வசதியாக கைப்பிடிக் கம்பிகள் உள்ளன. கூட்டம்
அதிகம் இல்லை. சஷ்டி கவசத்தின் பகுதியைப் பாடி வணங்கினோம்.
திருவலஞ்சுழி:
மிகச்சிறிய ஊரில் மிகப்பெரிய கோவில். வலதுபுறம் அழகான தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்பட்டது.
கோபுர வாயிலுக்கும் வினாயகர் சன்னதிக்கும் ஐந்து நிமிட நடை. வலஞ்சுழி வினாயகர் பாற்கடலைக்
கடையும்போது வந்த வெண்ணிற அமுத நுரையிலானவர். சுவேத வினாயகர். ஒரு சாண் அளவே உள்ளார்.
மிகச்சிறப்பு வாய்ந்த கருங்கல் பலகணியைப் பார்த்தோம். சுற்றுப்ரகாரத்தில் உள்ள ஒவ்வொரு
மாடத்திலும் ஒவ்வொரு டிசைனிலான பலகணிகள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தூண்களிலும் வித்தியாசமான
செதுக்கல். கருங்கல்லிலான உயரமான விளக்குகள் அற்புதம். தனி சன்னதியில் வினாயகர் வாணி
அம்மன் மற்றும் கமலாம்பிகை அம்மன் உடன் காட்சி தருகிறார். சிவன் சன்னதிக்கும் 5 நிமிட
நடை.
இத்தலத்தில்
உறையும் இறைவர் சடைமுடிநாதர் அம்மன் ப்ருஹந்நாயகி என்ற பெரிய நாயகி அம்மன். அம்மன்
சன்னதியில் அஷ்டபுஜ காளி அம்மன் காட்சி தருகிறார். மிகப்பெரிய சுற்றுப்ரகாரம். ஆள்
நடமாட்டம் குறைவு. பகலில் தனித்து செல்ல தயக்கமாக இருந்தது. மிகப்பெரிய கோவில் என்பதால்
சண்டிகேஸ்வரருக்கு தனியான பெரிய சன்னதி. சனி பகவானுக்கும் தனி சன்னதி.
தல
வரலாறு: பகீரதனுக்காக ஆகாயத்திலிருந்து வந்த கங்கா தேவியை முடியில் தாங்கிய சிவனார்
பூவுலகிற்கு கங்கையை வழிநடத்திய போது இவ்வூரில் நாக தேவர்கள் சிவராத்திரியில் பூஜிக்க
வரும் பிலத்வாரத்திற்குள் புகுந்து விட்டாள். கங்கையை வெளிக்கொணர சடையுடன் கூடிய முனிவரோ
அல்லது மன்னர் ஒருவரோ பிலத்வாரத்திற்குள் இறங்க வேண்டும். அருகிலுள்ள கொட்டையூரைச்
சேர்ந்த ஹேரண்ட முனிவர் உதவ கங்கை வெளியே வந்தாள்.






No comments:
Post a Comment