கனடாயணம் : அபுதாபி டு டொரன்டோ
அபுதாபியில் விமானத்திலிருந்து இறங்கும் இடத்தில் வீல்சேர் உதவியாளர் நின்றிருந்தார். எங்களுக்கான வீல்சேர் முன்னதாக பதிவு செய்யவில்லை எனினும் எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார். அம்மா வீல்சேரில் அமர நான் அவர்களைத் தொடர்ந்து நடந்தேன். அவர் சற்று வேகமாகச் சென்றார். நல்லவேளையாக நேராகச் சென்றதால் அவர்களைத் தொடர்ந்து நானும் விரைந்து சென்றேன். சிறிது தூரம் சென்ற நிலையில் ஓரிடத்தில் சில இருக்கைகளில் பயணியர் அமர்ந்திருந்தனர். அங்கே எங்களைக் காத்திருக்கச் சொன்னார். அந்த waiting area in charge போல காட்சியளித்த பெண்மணியிடம் இவர்கள் வீல்சேர் புக் பண்ணவில்லை ஆனால் இவர்களுக்குத் தேவை இருக்கிறது என்றார். அவர் எங்களிடம் நிறைய பயணிகள் இருப்பதால் உங்கள் முறை வர காத்திருங்கள் என்றார். மற்ற பயணிகளை வீல்சேரில் உதவியாளர் ஒவ்வொருவராக அழைத்துச் சென்றார்.நாங்கள் காத்திருந்த நேரத்தில் WiFi பயன்படுத்தி உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அளித்தோம். மகள்களுக்கும் அபுதாபி வந்து சேர்ந்த விபரம் தெரிவித்தும். கையோடு செல்ஃபி எடுத்து WhatsApp status ் போட்டாயிற்று.
எங்களது முறை வந்ததும் வீல்சேர் உதவியாளர் வந்து எங்களை அழைத்துச் சென்றார். வழியெங்கும் ட்யூட்டி ஃப்ரீ கடைகள், coffee shops என நிறைய இருந்தது. வெகு தூரம் நடந்து சென்று வழியில் ஒரு செக்யூரிட்டி செக் முடித்து இறுதியில் நாங்கள் செல்ல வேண்டிய கேட் எண் 58ஐ அடைந்தோம். அங்கு பலர் காத்திருந்தனர். வெவ்வேறு நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் பார்க்க சந்தோஷமாக இருந்தது. கேட் திறக்க சற்று நேரம் முன்பாக அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்லி ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் சில செக்யூரிட்டிகள் hand baggage checking செய்தனர். பெட்டி /கைப்பையைத் திறந்து மூலை முடுக்குகளில் சோதனை செய்தனர். எங்கள் ஆவணங்களை சரிபார்த்து செக்யூரிட்டி செக் தேவையில்லை. வரிசையில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
கேட் திறந்ததும் பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவை பார்த்தபின்
Health Kit கொடுத்தார்கள் . மாஸ்க், சானிடைஸர் ஆகியவை அடங்கிய ஹெல்த் கிட். அபுதாபியிலிருந்து டொரன்டோ செல்ல 14 மணிநேரம் பயணம். ஒரே இடத்தில் அவ்வளவு நேரம் அமர்வது, நீண்ட நேர விமானப் பயணம் ஆகியவை குறித்து சற்றே பயமாக இருந்தது. எனினும் பயணம் செய்தே ஆக வேண்டும் ஆதலால் விமானத்தில் எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம். அப்போது அபுதாபி நேரம் காலை மணி 9.20. விமானத்திற்குள் செல்ஃபி எடுத்து ஷேர் பண்ணியாச்சு. மீண்டும் விமானம் மேலே எழுந்தது. அபுதாபியின் அழகான சாலைகளைப் பார்த்து ரசித்தோம். களைப்பில் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விட்டது. கனடாயணம் தொடரும்…..
No comments:
Post a Comment